Categories
தேசிய செய்திகள்

“சுவப்னா சுரேஷின் சுய சரிதை புத்தகத்தின் முதல் பாகம் வெளியீடு”… அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு…!!!!!

சுவப்னா சுரேஷ் எழுதிய சுயசரிதை புத்தகத்தின் முதல் பாகம் வெளியானதால் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான சுவப்னா சுரேஷ் எழுதி வெளியிட்டுள்ள அவரது சுயசரிதையான சதியுடே பத்ம வியூகம் என்ற புத்தகத்தின் முதல் பாகம் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த புத்தகத்தில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது சுயசரிதையில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் குடும்பத்தினர் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை வெளியிட்டு இருக்கிறார். அதில் திருவனந்தபுரம் நகரில் இயங்கி வரும் ஐக்கிய அரபு தூதரகத்தின் அலுவலர் எனும் முறையில் கடந்த 2016 ஆம் வருடம் தான் சிவசங்கரனை சந்தித்தேன். அப்போது முதல் ஒரு வருட காலம் வரை அவர் தன்னுடைய நெருங்கிய உறவு கொண்டிருந்தார்.

இந்த நிலையில்  தன்னுடைய கடைக்கண் பார்வைக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய சிவசங்கர் தயாராக இருந்திருக்கின்றார். தங்க கடத்தல் வழக்கில் தான் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் சிக்கிக் கொள்வதற்கு முன்பான காலகட்டம் வரை சிவசங்கரனின் துணையாகவே வாழ்ந்தேன். இதனை அடுத்து பெங்களூருவில் தலைமறைவாக இருந்தபோது தன்னை NIA அதிகாரிகள் கைது செய்த பின் காட்சிகள் மாறத் தொடங்கியுள்ளது. மேலும் அவர் வெளியிட்டுள்ள புத்தகத்தில் ஏராளமான புகைப்படங்கள் சுவப்னா சுரேஷ் சிவசங்கருடன் கேக் ஊட்டி மகிழ்வது போன்ற நெருக்கமாக இருந்துள்ளதை காட்டுகிறது. இந்த நிலையில் தற்போது வெளியான இந்த புத்தகம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |