மதுபான கடை சுவரில் ஓட்டை போட்டு மது பாட்டில்களை திருட முயற்சி செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு கட்டுப் பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. அதன்படி மதுபான கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள கசம் பகுதியில் இருக்கும் மதுபான கடை சுவரில் மர்ம நபர்கள் ஓட்டை போட்டு உள்ளே சென்று சுமார் 3 இலட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள மதுபான பாட்டில்களை திருடி கடைக்கு வெளியில் உள்ள மறைவிடத்தில் வைத்துள்ளனர்.
அப்போது திருவலம் காவல்துறையினர் அந்தப் பகுதியில் ரோந்து பணிக்காக சென்ற போது வாகனத்தின் சைரன் சத்தம் கேட்டு மர்மநபர்கள் திருடிய மது பாட்டில்களை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் மதுபானங்களை கீழே போட்டு விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று கடந்த ஏப்ரல் மாதமும் மதுபான கடை சுவரில் ஓட்டை போட்டு திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர். அதேபோன்று இப்போதும் மதுபான கடை சுவரில் ஓட்டை போட்டு மதுபாட்டில்களை திருட முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மதுபானங்களை கடத்த முயற்சி செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.