திருமயம் பகுதியில் சுவரொட்டி தகறாரில் காவல் துறையினர் ஒருவரை கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் பகுதியில் தகர கொட்டகை பகுதி உள்ளது. அப்பகுதியில் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த சங்கம் சார்பில் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் கிராம உதவியாளர் ரமேஷ் அதை அகற்றியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்து அப்பகுதியில் உள்ள ஐந்து பேர் ஒன்று சேர்ந்து ரமேஷை தாக்கியுள்ளனர். இச்சம்பவத்தில், காவல்துறையினர் ஐந்து பேரில் ஒருவரை மட்டும் கைது செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பொதுமக்கள் கைது செய்தவரை விடுதலை செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கைது செய்தவரை விடுதலை செய்யவில்லை என்றால் என்றால் மீண்டும் போராட்டத்தை தொடருவோம் என பொது மக்கள் கூறி அங்கிருந்து கலைந்து சென்றனர்.