சுவர் இடிந்து விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் பகுதியில் ஓட்டுனரான செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதர்சன்(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வம் பழைய ஓட்டு வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சுவர் இடிந்து சுதர்சன் மீது விழுந்தது.
இதனால் படுகாயமடைந்த சுதர்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுதர்சனின் உடலை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.