சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் பலியான இடத்தை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பொருட்காட்சி திடலில் எதிரில் இருக்கும் சாப்டர் மேல்நிலைப் பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததால் விஸ்வரஞ்சன், அன்பழகன், சுதீஷ் ஆகிய 3 மாணவர்கள் பரிதாபமாக இறந்துவிட்டனர். மேலும் படுகாயமடைந்த 4 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, உதவி கலெக்டர் சந்திரசேகர் மற்றும் மருத்துவ அதிகாரிகள் போன்றோர் சுவர் இடிந்து விழுந்த இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூறும் போது, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆய்வு நடந்து வருகின்றது. இந்த ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின் படி திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய கலெக்டர் விஷ்ணு தலைமையில் 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.