Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சுவர் இடிந்து விழுந்த சம்பவம்…. தலைமை ஆசிரியர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு..!!

பள்ளியின் தலைமை ஆசிரியர் உட்பட 4 பேரை அதிகாரி பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 17-ஆம் தேதி கழிப்பறையின் ஒருபக்க சுவர் இடிந்து விழுந்ததால் சுதீஷ், அன்பழகன், விஸ்வரஞ்சன் ஆகிய மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பள்ளியின் தாளாளர் செல்வகுமார், தலைமை ஆசிரியர் பெர்சிஸ் ஞான செல்வி, கட்டிட ஒப்பந்ததாரரான ஜான் கென்னடி ஆகியோரை கைது செய்துள்ளனர்.

இதற்கிடையே சில ஆசிரியர்கள் சம்பவம் நடந்த போது மீட்பு பணியில் ஈடுபடாமல் வேடிக்கை பார்த்ததாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து நெல்லை திருமண்டல மேல்நிலைப்பள்ளிகளில் மேலாளர் புஷ்பராஜ் விசாரணை நடத்தியுள்ளார். இந்நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியரான பெர்சிஸ் ஞான செல்வி, உடற்கல்வி ஆசிரியர்கள் அருள், சுதாகர் டேவிட், சேசுராஜ் ஆகிய 4 பேரையும் அதிகாரி பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |