Categories
தேசிய செய்திகள்

சுவர் இடிந்து விழுந்த விபத்தில்… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பலி… சோக சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலத்தில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியாகிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஜோகுலம்பா கத்வால் மாவட்டத்தில் உள்ள கோத்தபள்ளி என்ற கிராமத்தில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3 குழந்தைகள் ஆவார்கள். இருவர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது .விபத்து நடந்த இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வருவாய் அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |