Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சுவாதி கொலை போல் மீண்டும் ஒரு கொலை… ஒருதலை காதலன் வெறிச்செயல்… சென்னையில் பரபரப்பு!!

தாம்பரம் ரயில் நிலைய வாயிலில் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னையிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருபவர் சுவேதா (22).. குரோம்பேட்டையை சேர்ந்த இந்த மாணவி தாம்பரம் ரயில் நிலையம் நோக்கி சென்றபோது, ராமச்சந்திரன் என்பவர் பின்னால் சென்று பேச முயன்றுள்ளார்.. ஆனால் சுவேதா பேச மறுத்துள்ளார்.. இதனால் ஆத்திரமடைந்த ராமச்சந்திரன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து சுவேதாவின் கழுத்தில் குத்தி விட்டு, பின் தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்..

பின்னர் இருவரும் ரத்த வெள்ளத்தில் விழுந்ததை அடுத்து, அருகில் இருந்தவர்கள் காவல் துறை மற்றும் ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.. அதனை தொடர்ந்து  குரோம் பேட்டை அரசு மருத்துவமனைக்கு இருவரும் கொண்டு செல்லப்பட்டனர்.. அங்கு மாணவி சுவேதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.. எனினும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார் சுவேதா.. மேலும் ராமச்சந்திரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.. எதற்காக இந்த சம்பவம் நடந்தது”? என்ன காரணம்? ஏதும் காரணம் இருக்கிறதா?  என்று விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஒருதலையாக ராமச்சந்திரன் காதலித்து வந்ததும், பேசாமல் சென்றதால் மாணவி சுவேதாவை அந்த இளைஞர் குத்திக்கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.. இதற்கிடையே ராமச்சந்திரன் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்..

அவர் ஓரளவுக்கு நினைவு வந்த பிறகு அவருக்கு உடல் தேர்ச்சி வந்த பிறகு காவல்துறையினர் அவரிடம் விசாரிப்பார்கள் என்று தெரிகிறது.. இது குறித்து காவல்துறையினர் அவரது குடும்பத்தினர், நண்பர்களிடமும் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.. இந்த சம்பவம் தாம்பரத்தில் பட்டப்பகலில் நடந்து இருப்பதால் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் 2016ல் சுவாதி கொல்லப்பட்ட நிலையில் மேலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |