Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுவாமிக்கு நகைகள் அணிவிக்க வேண்டும்….. இந்து பரிஷத் அமைப்பினரின் போராட்டம்…. குமரியில் பரபரப்பு…!!

விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆதிகேசவபெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இந்த சுவாமிக்கு மாணிக்கமாலை, மரகத மாலை, வலது மற்றும் இடது பொன் விரல் அஸ்தம், போன்ற பல்வேறு நகைகள் உள்ளது. இந்த நகைகள் தற்போது பத்மநாபபுரம் நீலகண்ட சுவாமி திருக்கோவில் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நகைகளின் மொத்த மதிப்பு 6 கிலோ இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சுவாமிக்கு ஜூலை 6-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் கும்பாபிஷேகத்தின் போது சுவாமிக்கு நகைகள் அணிவிக்க வேண்டும் என பொதுமக்கள் அறநிலையத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் அறநிலையத்துறை இதுவரை எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கோவிலின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் ஆதிகேசவப் பெருமாளுக்கு கும்பாபிஷேகத்தின் போது நகைகள் அணிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த போராட்டத்திற்கு விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட துணை தலைவர் பத்மகுமார் தலைமை தாங்கினார். இந்தப் போராட்டத்தில் திருவட்டார் பேரூராட்சி உறுப்பினர் சிந்து, மாநில இணைச் செயலாளர் காளியப்பன், பா.ஜ.க கட்சியின் மாவட்ட தலைவர் தர்மராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் போராட்டத்தின் முடிவில்  இவர்கள் தங்களது  கோரிக்கையை மனுவாக எழுதி அதிகாரிகளிடம் கொடுத்தனர்.

Categories

Tech |