ஐயப்ப சுவாமி சிலை கண் திறந்து மூடுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செல்வபுரம் தில்லைநகரில் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தனி சன்னதியில் இருக்கும் ஐயப்ப சுவாமிக்கு சமீபத்தில் மண்டல பூஜை நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில் ஐயப்ப சுவாமிக்கு நெய், மஞ்சள் சந்தனம் உட்பட பல்வேறு பொருட்களைக் கொண்டு செய்யப்பட்ட அபிஷேகத்தை பக்தர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.
அதில் நெய் அபிஷேகம் நடைபெற்று கொண்டிருந்த போது சுவாமி சிலையின் கண் திறந்து மூடுவது போல பதிவாகி இருந்ததை பார்த்து பக்தர் ஒருவர் மகிழ்ச்சி அடைந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வளைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. ஐயப்ப சாமியின் சிலை கண் திறந்ததாக கூறப்படும் நிகழ்வு பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.