நேர்காணலில் பல சுவாரசியமான கேள்விகளுக்கு நித்யா மேனன் வெகுளியாக பதிலளித்துள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வருகின்றார் நித்யா மேனன். இவர் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான 180 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு வெப்பம், ஓ காதல் கண்மணி,மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
இந்த நிலையில் அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் சோபனா என்ற கேரக்டரில் நடித்துள்ள நித்யா மேனனின் நடிப்பு அனைவரது பாராட்டையும் பெற்று வருகின்றது. இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் நித்யாமேனன் நேர்காணலில் கலந்து கொண்ட பேசினார்.
அப்பொழுது அவரிடம் நீங்கள் நிறைய ஹீரோயின்கள் உடன் பயணம் செய்து இருக்கின்றீர்கள். அப்படி இருக்கும் பொழுது ஈகோ கிளாஸ் எங்கேயாவது நடந்திருக்கா என கேட்கப்பட்டதற்கு பெரும்பாலும் எல்லா ஹீரோயின்ஸும் ஃப்ரெண்ட்லி தான். ஆனால் இந்த பொறாமை எல்லாமே ஹீரோஸ் கிட்ட தான் இருக்கு.
ஒரு கதாநாயகி என்றால் இப்படி தான் இருக்க வேண்டும். இவ்வளவு உயரத்தில் 0 சைஸ் என ஒரு பிம்பம் இருந்த நிலையில் அதை உடைத்து எறிந்த ஒரு நாயகியாக உங்களைப் பார்க்கிறோம். இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என கேட்கப்பட்டதற்கு நான் பொதுவா யாரையுமே உருவ கேலி செய்ய மாட்டேன். ஏனென்றால் அதை நான் அனுபவித்து இருக்கின்றேன். இதுக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. மக்களுக்கு புடிச்சிருக்கு என்பதால் நான் இன்று ஒரு ஹீரோயினாக இருக்கின்றேன்.
மேலும் அவரிடம் வரப்போகும் கணவர் எப்படி இருக்க வேண்டும் என கேட்கப்பட்டதற்கு எனக்கு சரியா சொல்ல தெரியல. இப்போ வரைக்கும் என்னோட லைப்ல நான் அப்படி ஒரு பையனை பார்க்கல. பார்த்தால் அதை பத்தி யோசிக்கலாம் என கூறினார்.
மேலும் உங்களுக்கு தனுஷ் கூட நடிப்பதற்கு இதுக்கு முன்னாடி சான்ஸ் கிடைச்சிருக்கா? இல்ல திருச்சிற்றம்பலம் திரைப்படம் தான் முதல் திரைப்படமா? என கேட்கப்பட்டதற்கு எனக்கு தனுஷார் கூட நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தது. ஆடுகளம் திரைப்படத்தில் நடிக்க எனக்கு தான் முதல் சான்ஸ் வந்தது. ஆனால் நான் அப்பொழுது கொஞ்சம் பிரேக் எடுத்து இருந்தால் என்னால் நடிக்க முடியவில்லை. பின் தனுஷ் ஒருநாள் எனக்கு போன் செய்து உங்களை மனதில் நினைத்து ஒரு கதை எழுதி இருக்கின்றேன். நீங்க நடிக்கிறேன் என்று சொன்னால் அந்தக் கதையை ஸ்டார்ட் பண்ணுவோம் என கூறினார். ஆனால் அதுக்கப்புறம் நடிக்க முடியல. அந்த கதை இன்னும் அப்படியே தான் இருக்கின்றது. இனிவரும் நாட்களில் வேணா படம் வெளியாக வாய்ப்பிருக்கின்றது எனக் கூறியுள்ளார்.