Categories
உலக செய்திகள்

சுவிட்சர்லாந்தில் இருவரை பள்ளத்தில் தள்ளிவிட்ட வழக்கு..போலீசார் விசாரித்ததில் முக்கிய திருப்பம் .!!

சுவிட்சர்லாந்தில் இருவரை பள்ளத்தில் தள்ளிவிட்ட வழக்கு ஒன்று போலீசாரால்  விசாரிக்கப்பட்டு தற்போது கொலை வழக்காக மாறியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் பெர்ன் மண்டலத்தில் கண்டெர்தல் பகுதியில் அமைந்துள்ள பள்ளத்தாக்கில் இரண்டு நபரை 63 வயது தக்க நபர் தள்ளிவிட்ட வழக்கு தற்போது கொலை வழக்காக மாறியுள்ளது. கடந்த 2019 நவம்பர் 5 ஆம் தேதி இளைஞன் ஒருவனை நபர் ஒருவர் அழைத்து சென்று பள்ளத்தாக்கில் தள்ளி விட்டுள்ளார்.பிறகு அவர் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் தப்பியதாக அதிகாலை வந்த வாகன ஓட்டுநரிடம் இளைஞன் கூறியுள்ளான்.

இச்சம்பவத்தை அடுத்து 63 வயது நபரை போலீசார் கைது செய்தது. ஆனால் இதே போன்று ஏற்கனவே 2019 மே மாதம் 18 வயது இளைஞனை போலீசார் பள்ளத்தாக்கில் இருந்து சடலமாக மீட்டனர். அந்த வழக்கு குறித்து எந்த ஒரு தகவலும் கிட்டாத நிலையில் இந்த 63 வயது நபரை போலீஸார் விசாரணை செய்தது. அதில் 63 வயது நபருக்கும் இந்த இறந்த இளைஞருக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் தற்போது 63 வயது நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Categories

Tech |