சுவிட்சர்லாந்தில் ஆயுதத்துடன் போலீசார் ரயிலில் ஏறியதை கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
சனிக்கிழமை மாலை 7 மணி அளவில் சூரிச்சில் ஆயுதத்துடன் போலீசார் ரயிலில் திடீரென்று நுழைந்ததை கண்ட பயணிகள் சிலர் பயந்து அலரி கைகளை தூக்கியபடி இருந்துள்ளனர். போலீசார் ரயிலில் ஏறி சுமார் 10 நிமிடங்கள் சோதனையை மேற்கொண்டதாக பயணிகளில் சிலர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் இருப்பதாக வெளியான தகவலை அடுத்து ரயிலில் சோதனை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். ரயிலில் இருந்து போலீசார் இறங்கிய உடனே மற்ற பயணிகளும் வேறொரு ரயிலில் ஏற்றி அனுப்பப்பட்டனர்.