Categories
Uncategorized உலக செய்திகள்

சுவிட்சர்லாந்து ஏரியில் குளித்த நபர் பலி…. கடுமையாக போராடியும் மீட்க முடியாத சோகம்…!!!

ஸ்விட்சர்லாந்தில் ஒரு ஏரியில் நீச்சலடித்து கொண்டிருந்த பிரிட்டனை சேர்ந்த நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சுசிலாந்து நாட்டின் ஸ்வென்டிசி என்ற ஏரியில் பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஒரு நபர் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தார். அப்போது, அவர் திடீரென்று நீரில் மூழ்கினார். அங்கிருந்தவர்கள்,  அவரை காப்பாற்ற முயற்சி மேற்கொண்டனர். அதன்பிறகு, காவல்துறை அதிகாரிகளுடன், விமான மீட்பு சேவை, தீயணைப்பு குழுவினர் மற்றும் பராமரிப்பு குழுவினரும் மீட்பு பணியை மேற்கொண்டனர்.

கடுமையான போராட்டத்திற்கு பிறகும் மீட்பு குழுவினரால் அவரை உயிருடன் மீட்க முடியவில்லை. விபத்து ஏற்பட என்ன காரணம்? என்பது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Categories

Tech |