சுவிட்சர்லாந்தில் ஒருசுவிஸ் ப்ராங்குக்கு விற்கப்படும் வீடுகளை வாங்குவதற்கு ஆள் இல்லாததால், அத்திட்டமே விலக்கிக்கொள்ளப்பட்டு உள்ளது.
சுவிஸ் மாகாணம் Ticinoவில் உள்ள Gambarogno கிராமத்தில் கடந்த 2019-ம் வருடம் முதல் ஒரு சுவிஸ் ப்ராங்குக்கு வீடுகளானது விற்பனை செய்யப்பட்டது. ஆனால் வீடுகளை வாங்கியவர்களில் சில பேர், ஏன்தான் அந்த வீடுகளை வாங்கினோமோ என கவலைப்படும் அளவிற்கு பிரச்சினைகள் இருந்தது. அந்த வீடுகள் ஒரு ப்ராங்குக்கு விற்கப்பட்டாலும், அதை பழுதுபார்ப்பதற்கே அதிக செலவிடவேண்டி இருந்தது. மேலும் அந்த வீடுகள் வெகுதொலைவில் இருப்பதால் அந்த வீடுகளை செப்பனிடுவதற்கான பொருட்களை கொண்டு செல்ல சரியான பாதைகள் முதலான வசதிகள் இல்லாமல் இருந்தது.
இதனிடையில் சில வீடுகளில் தண்ணீர்வசதி இருந்தாலும், மின்சாரம் மற்றும் எரிவாயு இல்லை. மேலும் சரியான போக்குவரத்து வசதியுமில்லை. அத்துடன் மின்சாரஇணைப்பு பெறுவது மிகவும் கடினமான விடயமாகவும் இருந்தது. இதுபோன்று பல பிரச்சினைகள் இருப்பது தெரியவந்ததை அடுத்து சென்ற 3 வருடங்களாக யாருமே அந்த வீடுகளை வாங்கவில்லை. எனவே ஒரு சுவிஸ் ப்ராங்குக்கு வீடு எனும் திட்டம் இப்போது கைவிடப்பட்டிருக்கிறது.