Categories
பேட்மிண்டன் விளையாட்டு

சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி…. திடீரென விலகிய லக்சயா சென்…. காரணம் இது தானாம்…!!!

சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியானது  இன்று முதல் 27 தேதி வரை அந்நாட்டின் பாசெல்  நகரில் வைத்து நடக்கவுள்ளது. இந்த போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், சாய் பிரனீத், எச்.எஸ்.பிரனாய், காஷ்யப் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சாய்னா நேவால், ஆகார்ஷி காஷ்யப், ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இதையடுத்து ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி, துருவ் கபிலா-எம்.ஆர்.அர்ஜூன் இணையும், பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி,  திரீசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடியும் கலந்து கொள்கிறது. இந்நிலையில் இந்திய வீரரான லக்சயா சென் சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இருந்து  விலகியுள்ளார்.

லக்சயா சென்  ஜெர்மன் ஓபன் மற்றும் ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டிகளில் தொடர்ச்சியாக பங்கேற்றதால், உடல் சோர்வு காரணமாக சுவிஸ் ஓபனில் விளையாடவில்லை என இந்திய பேட்மிண்டன் சங்கத்திற்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் பெங்களூரு வந்து 7 முதல் 10 நாட்கள் வரை ஓய்வெடுத்து, கொரிய ஓபன் தொடரில் மீண்டும் பங்கேற்பார் என்ற  தகவலும்  வெளியாகி உள்ளன.

Categories

Tech |