சுவிட்சர்லாந்தில் டிரைவிங் லைசன்ஸ் எடுப்பதற்கு பல நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. அதை பற்றி இதில் நாம் தெரிந்துகொள்வோம்.
அனைத்து நாடுகளிலும் டிரைவிங் லைசன்ஸ் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை சாலையில் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமாக டிரைவிங் லைசன்ஸ் வழங்கி வருகின்றது. அதேபோல் சுவிட்சர்லாந்து நாட்டில் டிரைவிங் லைசென்ஸ் வாங்குவதற்கு பல விதி முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. முதலாவது சுவிட்சர்லாந்தில் டிரைவிங் லைசன்ஸ் டெஸ்டில் மூன்று முறைக்கு மேல் தோல்வி அடைந்துவிட்டால் நீங்கள் ஒரு மனநல நிபுணரை பார்க்க வேண்டும்.
அந்த மனநல நிபுணர் உங்களுக்கு என்ன பிரச்சனை எதற்காக நீங்கள் டிரைவிங் லைசென்ஸ் எடுப்பதில் தோல்வி அடைந்தீர்கள் என்று முழு சோதனை செய்வார்களாம். அதை தொடர்ந்து அவர்கள் தரும் மருந்தை சாப்பிட்ட பிறகு அந்த மனநல மருத்துவர் உங்களுக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என்று சான்றிதழ் கொடுத்தால்தான் அடுத்த முறை நீங்கள் டிரைவிங் லைசென்ஸ் எடுப்பதற்கான டெஸ்ட்டை அட்டன்ட் பண்ண முடியுமாம். அதன் பிறகு ஒருமுறை நீங்கள் தோல்வியடைந்தாலும் மறுபடியும் மனநல நிபுணரை பார்க்க வேண்டிய நிலைமை ஏற்படும். இதுபோன்று டெஸ்டில் வெற்றி பெறும் வரை தொடர்ந்து மனநல மருத்துவரை சந்திக்க வேண்டி இருக்கும் என்று தெரிவிக்கின்றனர். மொத்தத்தில் நீங்கள் டிரைவிங் டெஸ்டில் தோல்வி அடைந்து கொண்டே இருந்தால் உங்களை ஒரு நோயாளி போல் தான் நடத்துவார்கள் என்று கூறுகின்றனர்.