Categories
உலக செய்திகள்

“சுவிற்சர்லாந்தில் 10,000 ஐ கடந்த உயிரிழப்புகள்!”.. ஆனால் தொற்று குறைந்ததாக கூறும் நிபுணர்கள்.. காரணம் என்ன..?

சுவிட்சர்லாந்தில் பலி எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் மொத்தமாக கணக்கிடும்போது, கொரோனா குறைந்துவருவதாக நிபுணர் குழு தெரிவித்துள்ளது. 

சுவிட்சர்லாந்தில் கடந்த புதன்கிழமை நிலவரத்தின்படி, கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் எண்ணிக்கை 10,000 ஐ கடந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் சுமார் 8.6 மில்லியன் மக்கள் தொகை உள்ளது. இதில் தற்போது வரை கொரோனா பாதித்தவர்கள் சுமார் 6,64,000 நபர்கள் மற்றும் பலியானோர் எண்ணிக்கை 10,012 ஆக உள்ளது.

இந்நிலையில் அரசாங்கத்தின் கொரோனா நிபுணர் குழுவினர், சுவிட்சர்லாந்தில் கொரோனா தற்போது சீரான நிலையில் உள்ளது என்றும் முன்பு உள்ளதை விட முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் கூறியுள்ளனர். அங்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தினால் வைரஸ் பரவும் விகிதம் சமீப காலங்களில் குறைந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அதாவது மருத்துவமனைகளில் நான்கில் ஒரு பங்கினர் தான் கொரோனா நோயாளிகளாக தீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ளனர். எனவே உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தாலும் மொத்தமாக கணக்கிடும்போது அங்கு கொரோனா குறைந்து வருவதாக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |