ஸ்விட்ஸர்லாந்தில் இஸ்லாமிய பெண்களை பர்தா அணிய தடை செய்ய மேற்கொண்ட வாக்கெடுப்புக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு பெரும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை சுவிட்சர்லாந்தில் ஃபர்தா அணிய தடைக்காக வாக்ககெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 51.2% வாக்காளர்கள் பொது இடங்களில் பர்தா மற்றும் முக மறைப்பு அணிவதற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.மேலும் நடத்தப்பட்ட வாக்கெடுப்பிற்கு வழிவகுத்த அரசியல் பிரச்சாரத்தால் இஸ்லாமிய பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும் நாடுகளுடன் சுவிட்சர்லாந்தும் இணைந்து விட்டதாக ஐக்கிய மனித உரிமை ஆணையர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையர் அலுவலகம் பர்தா அணிவது அவர்களது விருப்பம் அவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்றும், சட்டப்படி பர்தாவை தடை செய்வது அவர்களின் மத நம்பிக்கையை வெளிப்படுத்துவதை தடுக்கக் கூடிய விஷயம் என்றும் கூறியுள்ளது.