தேவையான பொருட்கள்
- துவரம் பருப்பு – ஒரு கப்
- பல்லாரி – ஒன்று
- எண்ணெய் – தேவைக்கேற்ப
- கருவேப்பிலை – சிறிதளவு
- பூண்டு – 5 பல்
- வத்தல் – 4
- உப்பு – தேவைக்கேற்ப
- புளி – சிறிதளவு
செய்முறை
முதலில் வெங்காயத்தை நறுக்கி வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி துவரம்பருப்பை சிவந்து வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை மற்றும் வத்தல் போட்டு வறுக்கவும்.
பின்னர் வறுத்து வைத்துள்ள கருவேப்பிலை வத்தல் துவரம் பருப்பு அரைக்கவும்.
அதனுடன் பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.
இறுதியாக புளியையும் அதனுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
துவையல் பதத்திற்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.