அரிசி வடை செய்ய தேவையான பொருள்கள் :
இட்லி புழுங்கல் அரிசி – 7 கப்
துவரம்பருப்பு – 2 கப்
வெங்காயம் – 4 கப்,
கொத்தமல்லித் தழை – 1 கப்
காய்ந்த மிளகாய் – 10
தனியா – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை
கட்டிப் பெருங்காயம் – சிறிதளவு
எண்ணெய் – சிறிதளவு
உப்பு – சிறிதளவு
முதலில் அரிசி, துவரம்பருப்பு இரண்டையும் தண்ணீரில் கழுவி, ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
அதன் பின் நீரை வடித்து அதனுடன் தனியா, உப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து கிரைண்டரில் அரைக்கவும்.
அடுத்து ரவை பதத்துக்கு அரைபட்டதும் வெங்காயம் போட்டு 2 சுற்று சுற்றி வடை பதத்துக்கு அரைக்கவும்.
பிறகு கொத்தமல்லியை இதனுடன் சேர்த்துக் கலக்கவும். மாவை வடைகளாகத் தட்டி காய்ந்த எண்ணெயில் போட்டு, சிவந்ததும் எடுக்கவும்.சுவையான அரிசி வடை தனியார் .