அவல் கேசரி செய்ய தேவையான பொருள்கள் :
சிவப்பு அவல் – 300 கிராம்
தண்ணீர் – 500 கிராம்
ஏலக்காய் – 4 எண்ணம்
முந்திரிப் பருப்பு – 7 எண்ணம்
சீனி – 200 கிராம்
கிஸ்மிஸ் பழம் – 14 எண்ணம்
நெய் – 8 டேபிள் ஸ்பூன்
முதலில் வாணலியில் 2 ஸ்பூன் நெய் விடவும். நெய் உருகியதும் அதனுடன் அவலைச் சேர்த்து வறுக்கவும்.
அதன் பின் அவல் பொறுபொறுவென்று வந்ததும் தனியே எடுத்து வைத்து விடவும். பின்பு 2 ஸ்பூன் நெய்யை விட்டு முந்திரியையும் கிஸ்மிஸையும் வறுத்து எடுக்கவும்.
பிறகு அடிகனமான பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். பின் தண்ணீர் நன்கு கொதித்ததும் அதனுடன் வறுத்து வைத்துள்ள அவலை சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
அடுத்து அவல் வெந்து தண்ணீர் வற்றும் சமயத்தில் சீனியை சிறிது சிறிதாகச் சேர்த்து கிளறவும். பின் கெட்டியாகும் சமயத்தில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் மற்றும் ஏலக்காயை ஒன்றிரண்டாக உடைத்து சேர்க்கவும். பின் மீதமுள்ள நெய்யைச் சேர்த்து நன்கு கிளறி இறக்கி விடவும். சுவையான அவல் கேசரி தயார்.