ஆந்திரா மீன் குழம்பு செய்ய தேவையான பொருள்கள் :
மீன் – அரை கிலோ
எண்ணெய் -அரை கப்
கடுகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
வெந்தயம் – கால் ஸ்பூன்
தக்காளி – 1
மல்லி தூள் – 2 ஸ்பூன்
மிளகாய் தூள் – 3ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1ஸ்பூன்
பெருங்காயம் – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு
புளி – 1 சிறிய எலுமிச்சை அளவு
உப்பு – தேவையான அளவு
முதலில் மீனை நன்கு கழவி சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெந்தயம் போட்டு தாளிக்கவும். அதனுடன் சிறிது பெருங்காயம் சேர்க்கவும்.
அதன் பின் தக்காளியை மசித்து அதனு்டன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின் அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும், பின்பு நறுக்கி வைத்துள்ள மீன் துண்டுகளை மசாலா கலவையுடன் சேர்த்து கலக்கவும்.
பின்பு தேவையான அளவு புளி தண்ணீரை சேர்த்து 20 நிமிடம் கொதிக்க விடவும். வெந்த பின் சிறிது கறிவேப்பிலை தூவி இறக்கவும். காரமான ஆந்தரா மீன் குழம்பு தயார்.