Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான இட்லி மஞ்சூரியன்… செய்து பாருங்கள் …!!!

இட்லி மஞ்சூரியன் செய்ய தேவையான பொருள்கள் :

ஆரஞ்சு ரெட் கலர்            – 2 சிட்டிகை
இட்லிகள்                             –  6
இஞ்சி-பூண்டு விழுது     –  2 டீஸ்பூன்
கார்ன்ஃப்ளார்                      –  2 தேக்கரண்டி
கடலை மாவு                     –  2 தேக்கரண்டி
மிளகாய்தூள்                     –  2 தேக்கரண்டி
கரம் மசாலாதூள்            –   1 தேக்கரண்டி
சீரகத்தூள்                           –   1 தேக்கரண்டி
உப்பு                                       – தேவையான அளவு
எண்ணெய்                          – தேவையான அளவு

செய்முறை :

முதலில் இட்லிகளை நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். பின்பு அதனோடு இஞ்சி-பூண்டு விழுது, கார்ன்ஃப்ளார், கடலைமாவு, மிளகாய்தூள், கரம் மசாலாதூள், சீரகத்தூள், ரெட் கலர், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீரும் சேர்த்து நன்கு பிசறிக்கொள்ளுங்கள்

அதன் பின்  ஒரு பாத்திரத்தில் எண்ணெயைக் காயவைத்து, கலந்து வைத்துள்ள இட்லிகளை ஐந்தாறாகப் எண்ணையில் போட்டுப் பொரித்தெடுங்கள்.சுவையான ஸ்பைசி இட்லி மஞ்சூரியன் தயார்.

Categories

Tech |