Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான இனிப்பு பூந்தி … செய்து பாருங்கள் …!!!

இனிப்பு பூந்தி செய்ய தேவையான பொருள்கள் :

கடலை மாவு           – 1 கப்
சர்க்கரை                    – 1 கப்
உப்பு                             – 1 சிட்டிகை
டால்டா                      – பொரிக்க
முந்திரிப் பருப்பு     – 10
கிஸ்மிஸ்                   – 20
கல்கண்டு                  – 1 டேபிள்ஸ்பூன்
கிராம்பு, ஏலக்காய் – 4
பச்சை கற்பூரம்        – 1 சிட்டிகை
மஞ்சள் கலர்

 செய்முறை :

முதலில் கடலை மாவைக் கட்டிகளில்லாமல் நன்கு சலித்துக்கொள்ளவும். பிறகு சிட்டிகை உப்பு சேர்த்து, தேவையான நீர் கலந்து தோசைமாவு பதத்திற்குக் கரைத்துக்கொள்ளவும்

பின்பு அடுப்பில் வாணலியில் டால்டாவைக் காயவைக்கவும்.அதன்பின் பூந்திக் கரண்டி அல்லது துளைகள் உள்ள வேறு ஏதாவது பாத்திரத்தின் உட்புறமாக சிறிது எண்ணெய் தடவிவிட்டு, காய்ந்த டால்டாவிற்கு நேராகப் பிடித்து, மாவை சிறிதுசிறிதாக விட்டால் முத்துமுத்தாக விழ ஆரம்பிக்கும்.

 அதன் பின் வாணலியில் டால்டா நிறைத்து பூந்தி விழுந்ததும் நிறுத்திவிட்டு, திருப்பிவிட்டு வேகவிடவும். வெந்ததும் சிறிது முன்கூட்டியே மென்மையான பதத்தில் எடுத்து, வடிதட்டில் கொட்டி உபரி டால்டாவை வடிக்கவும். ஒரு கனமான வாணலி அல்லது உருளியில் சர்க்கரையுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும்.

பிறகு ஒற்றைக் கம்பிப் பாகுப் பதத்திற்கு சிறிது கூடவே கொதிக்கவிட்டு ஆனால் இரட்டைக் கம்பிப் பதம் அளவு கெட்டியாகாமல் இறக்கிவிடவும்.

அடுத்து இறக்குமுன், ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம், நெய்யில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ், ஒன்றிரண்டாக உடைத்த கிராம்பு, மஞ்சள் நிறம் சேர்த்துவிடவும்.பாகில் டைமண்ட் கல்கண்டு, பூந்தியைக் கலக்கவும்.

Categories

Tech |