Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான இனிப்பு போண்டா… செய்து பாருங்க…!!!

இனிப்பு போண்டா செய்ய தேவையான பொருள்கள் :

குண்டு உளுந்து     – 1/2 கிலோ,
ஏலக்காய்த்தூள்     – 1/4 தேக்கரண்டி,
சர்க்கரை                    – 1/4 கிலோ,
எண்ணெய்                 – பொரிக்க தேவையான அளவு

 செய்முறை :

முதலில் உளுத்தம் பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைத்து, வடைக்கு அரைப்பது போல் கெட்டியாக, ஆனால் மெதுமெதுப்பாக அரைக்கவும். சர்க்கரையை 1 தம்ளர் தண்ணீர் விட்டு, கம்பி பாகு வரும் வரை காய்ச்சவும். அதனுடன் ஏலக்காய்த்தூளை சேர்க்கவும்.

அதன் பின் மாவை சிறு சிறு உருண்டைகளாக (நெல்லிக்காயளவு) உருட்டி, எண்ணெயில் பொரித்து சர்க்கரைப் பாகில் போடவும். அவ்ளோதான் அரை மணி நேரம் கழித்து சாப்பிடலாம்.

Categories

Tech |