Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான இறால் குழம்பு… செய்து பாருங்கள் …!!!

இறால் குழம்பு செய்ய தேவையான பொருள்கள் :

குடல் நீக்கிய இறால்      – 1  கிலோ
மஞ்சள்தூள்                        – 1  தேக்கரண்டி
தனியாத்தூள்                     –  4  தேக்கரண்டி
சோம்பு                                   –  2 தேக்கரண்டி
தேங்காய்                              – 1  மூடி
மிளகாய்த்தூள்                   –  3 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய்               –  4
புளி                                            –  2கோலி குண்டு அளவு
தக்காளி                                   – 1  கிலோ
எண்ணெய், உப்பு                 – தேவையான அளவு
இஞ்சி, பூண்டு விழுது       –  2 தேக்கரண்டி
கருவேப்பிலை                    –    3 கொத்து
வெங்காயம்                            – 1கிலோ

 செய்முறை :

முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன் நிறமாக வதக்கவும்.

அதன் பின்  இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ளவும்.பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.

பின்னர்  மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள், தனியாத்தூள்,சிறிது தண்ணீர் மற்றும் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலைச் சேர்த்து வேக விடவும்.இறாலை ஆவியில் வேக வைத்தும் பயன்படுத்தலாம்.

பிறகு இதனுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய், விதை நீக்கிய காய்ந்த மிளகாய், தேவையான உப்பு சேர்த்து வேக விடவும்.

அடுத்தது நன்கு கொதித்து வந்தவுடன், புளியைச் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். சுவையான இறால் குழம்பு தயார்.பரிமாறவும்

Categories

Tech |