உப்புக்கண்டம் செய்ய தேவையான பொருள்கள் :
ஆட்டு இறைச்சி – 1 கிலோ,
இஞ்சி – சிறிது துண்டு,
காய்ந்த மிளகாய் – 15
பூண்டு – 12 பல்,
மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
முதலில் பூண்டு, இஞ்சி, மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மைய அரைத்து வைக்கவும். ஆட்டு இறைச்சியை கழுவி சுமாரான துண்டுகளாக நறுக்கவும். அரைத்த விழுது சேர்த்து மட்டனில் நன்கு பிசிறவும்.
அதன் பின் பிசிறிய மட்டனை ஒரு நூலில் கோர்த்து வெய்யிலில் நன்கு காய வைக்கவும். (வரும் காகத்திற்கு நான் பொறுப்பல்ல). நன்கு காய்ந்ததும் எடுத்து டப்பாவில் போட்டு மூடி வைத்தால் கெடவே கெடாது.
அடுத்து தேவைப்படும் போது எண்ணெயை காய வைத்து உப்புகண்டத்தை லேசாக தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டியதுதான்.