Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான உருளைக்கிழங்கு கிரேவி… செய்து பாருங்க…!!!

உருளைக்கிழங்கு கிரேவி செய்ய தேவையான பொருள்கள் :
உருளை கிழங்கு             – 4 பெரியது
பெரிய வெங்காயம்        – 2
தக்காளி                                – 2
இஞ்சி                                    – 1 துண்டு
பூண்டு                                   – 10
இஞ்சிப்பூண்டு விழுது  – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் பொடி                – 2 தேக்கரண்டி
சாம்பார் பொடி                 – 1 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள்                     – சிறிதளவு
உப்பு                                      – தேவையான அளவு
தாளிக்க தேவையானவை:
எண்ணெய் – தேவையான அளவு
சோம்பு – சிறிதளவு
பட்டை – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு
செய்முறை :
முதலில் உருளை கிழங்கை வேக வைத்து உரித்து நறுக்கிக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து பின் அதனுடன் வெங்காயம், தக்காளி, இஞ்சிப்பூண்டு விழுது ஆகியவற்றை போட்டு வதக்கியப்பின் உருளை கிழங்கு மற்றும் பொடி வகைகளையும் போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு, கடைசியில் உப்பு போட்டு கிரேவி பதம் வந்தவுடன் இறக்கவும். அவ்ளோதான் சுவையான உருளை கிழங்கு மசாலா ரெடி.

Categories

Tech |