அருமையான ஐவ்வரிசி பாயசத்தை எப்படி செய்வது என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம் :
தேவையான பொருள்கள் :
ஐவ்வரிசி -1 கப்
சேமியா -1/4 கப்
அரிசி மாவு -1 டீஸ்பூன்
பால்-2 கப்
முந்திரி பருப்பு -1 டீஸ்பூன்
கிஸ்மிஸ் -1 டீஸ்பூன்
ஏலக்காய் -1
சக்கரை -1/2 கப்
தண்ணீர் -2 கப்
உப்பு -1/2 டீஸ்பூன்
நெய் -4 டீஸ்பூன்
செய்முறை :
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்த பின், ஜவ்வரிசி சேர்த்து வேக விடவும். ஜவ்வரிசி வெந்த பின் சேமியா சேர்த்து கொள்ளவும். பின்னர் உப்பு சேர்த்து கிளறவும்.
கடாயில் நெய் சேர்த்து கிஸ்மிஸ் மற்றும் முந்திரி பருப்பு சேர்த்து கிளறவும். பின்பு அதில் ஜவ்வரிசியை சேர்த்து கொள்ளவும்.
அதனோடு காய்ச்சிய பால், தேவையான அளவு சக்கரை சேர்த்து கொள்ளவும். இப்போது சுவையான ஜவ்வரிசி பாயாசம் தயார்.