Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான கத்தரிக்காய் கொத்சு… செய்து பாருங்கள் …!!!

கத்தரிக்காய் கொத்சு செய்ய தேவையான பொருள்கள் :

கத்தரிக்காய்                             – 4
தக்காளி                                      –  3
பெரிய வெங்காயம்               –  2
தனி மிளகாய்த் தூள்             –  1  மேசைக்கரண்டி
கடலை பருப்பு                         –   2 மேசைக்கரண்டி
கடுகு                                             –   2 தேக்கரண்டி
மஞ்சள் தூள்                              –   2 தேக்கரண்டி
தனியா தூள்                               –   2  மேசைக்கரண்டி
எண்ணெய்                                   –   4மேசைக்கரண்டி
கறிவேப்பிலை                           –    3 கொத்து
புளி                                                   –  எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய்                         – 4
உப்பு                                                –   2  தேக்கரண்டி

 செய்முறை :

முதலில் கத்தரிக்காய் கொத்சுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். கத்தரிக்காயின் காம்பை நீக்கி விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக வகுந்துக் கொள்ளவும்.

அதன் பின் வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிதாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் புளியை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் ஊற வைக்கவும். ஊறியதும் எடுத்து கரைத்து புளிக்கரைசல் எடுத்துக் கொள்ளவும்.

அடுத்து  ஒரு கப் தண்ணீர் ஊற்றி கரைத்து 2 கப் புளிக்கரைசல் எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் கடலை பருப்பு மற்றும் கறிவேப்பிலை போட்டு வதக்கவும். அதன் பிறகு கடலை பருப்பு சிவந்ததும் அதில் தனியா தூள், மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விடவும். பின்னர் அதனுடன் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வெங்காயம் பொன்னிறமாகும் வரை 2 நிமிடம் வதக்கவும்

பின்பு நறுக்கின தக்காளி போட்டு ஒரு நிமிடம் வதக்கி விட்டு அதன் பிறகு கத்தரிக்காயை போட்டு கத்தரிக்காய் வதங்கும் வரை 5 நிமிடம் வதக்கவும். அதில் கரைத்து எடுத்து வைத்திருக்கும் 2 கப் புளிக்கரைசலை ஊற்றி கலக்கி விட்டு 6 நிமிடம் கொதிக்க விடவும். 6 நிமிடம் கழித்து கத்தரிக்காய் கொத்சு கொதித்து நுரைத்து பொங்கிவரும் போது ஒரு முறை கிளறி அடுப்பை சிம்மில் வைத்து விட்டு 2 நிமிடம் கழித்து இறக்கி விடவும் சுவையும் வாசனையும் நிறைந்த கத்தரிக்காய் கொத்சு தயார். இதை இட்லி, தோசைக்கு பக்க உணவாக சாப்பிடலாம்.

Categories

Tech |