கார போளி செய்ய தேவையான பொருள்கள் :
கோதுமை மாவு – கால் கிலோ
வெங்காயம் – கால் கிலோ
காரட் – கால் கிலோ
உருளைக்கிழங்கு – கால் கிலோ
தனி மிளகாய் தூள் – அரை மேசைக்கரண்டி+அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 3/4 தேக்கரண்டி
உப்பு – 1 1/2 தேக்கரண்டி+அரை மேசைக்கரண்டி
எண்ணெய் – 4 மேசைக்கரண்டி
முதலில் வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். காரட்டை துருவிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் முழு உருளைக்கிழங்கை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து 3 விசில் வரும்வரை வேக வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை சலித்து எடுத்துக் கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி உப்பு, 2 தேக்கரண்டி எண்ணெய் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசைந்து ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயத்தை போட்டு உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரு நிமிடம் மூடி வைக்கவும்.
பிறகு மூடியை திறந்து வெங்காயம் வதங்கியதும் மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். மிளகாய் வாசனை போகும் வரை வதக்கவும். அதில் துருவிய காரட்டை போட்டு நன்கு ஒரு முறை கிளறி 4 நிமிடம் மூடி வைக்கவும்.
பிறகு திறந்து கரம் மசாலா போட்டு கிளறி மீண்டும் 3 நிமிடம் காரட் வேகும் வரை மூடி வைக்கவும். வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை தோல் உரித்து மசித்துக் கொள்ளவும். மசித்த உருளைக்கிழங்கை வெங்காயம் மற்றும் காரட் கலவையுடன் சேர்த்து 4 நிமிடம் கிளறவும்.
பின் கொத்தமல்லித் தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கு மசாலாவில் நறுக்கின கொத்தமல்லித் தழையை தூவி ஒரு முறை கிளறி அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
அதன் பின்னர் பிசைந்த மாவை சின்ன எலுமிச்சை அளவு உருண்டையாக உருட்டி சப்பாத்திக் கல்லில் வைத்து வட்டமாக தேய்த்துக் கொள்ளவும். இதே போல் மற்றொரு சப்பாத்தியையும் தேய்த்துக் கொள்ளவும்.
பின்பு தேய்த்து வைத்த சப்பாத்தியின் நடுவில் செய்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து பரப்பி விடவும்.அதன் மேல் மற்றொரு சப்பாத்தியை வைத்து சப்பாத்தி கட்டையால் மேலே லேசாக தேய்க்கவும்.