Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான காளான் பிரியாணி…செய்து பாருங்கள் …!!!

காளான் பிரியாணி செய்ய தேவையான பொருள்கள் :

புதினா, கொத்தமல்லி    – 2 கைப்பிடி அளவு
பாசுமதி அரிசி                     –  300 கிராம்
காளான்                                  – 11
உப்பு                                          – தேவையான அளவு
வெங்காயம்                         – 2
தக்காளி                                 – 3
எண்ணெய்                            – 4 டீஸ்பூன்
நெய்                                         –  3 டீஸ்பூன்
சோம்பு, சீரகம்                    – அரை  டீஸ்பூன்
இஞ்சி                                      – சிறிய துண்டு
பட்டை                                    – 3 துண்டு
பூண்டு                                      – 11 பல்
கிராம்பு                                    – 2
மிளகு, மிளகாய்த்தூள்    –  1 டீஸ்பூன்
தனியாத்தூள்                       –  2 டீஸ்பூன்
தேங்காய் துருவல்            – 3 டீஸ்பூன்
மஞ்சள்தூள்                           – அரை  டீஸ்பூன்
ஏலக்காய்                                – 3

 செய்முறை :

முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அரைக்கக் பின்பு கொடுத்துள்ளவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும்,

அதன் பின் அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

அடுத்து  அரைத்த விழுது, நறுக்கிய தக்காளி, காளான், உப்பு, புதினா, கொத்தமல்லி எல்லாம் சேர்த்து நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும், 2 கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், ஊற வைத்த அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

Categories

Tech |