குக்கர் அல்வா செய்ய தேவையான பொருள்கள் :
கோதுமை மாவு – 1கப்
வெஜிடபிள் ஆயில் – 100மில்லி
சீனி – 2கப்
முந்திரி பருப்பு – 50கிராம்
நெய் – 100மில்லி
கேசரி கலர் – 1சிட்டிகை
முதலில் கோதுமை மாவை நன்கு சலித்து ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும் .பின்பு அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும் .இப்பொழுது குக்கரின் உள்ளே இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் மாவு கரைத்த பாத்திரத்தை வைத்து குக்கரை மூடி அடுப்பில் வைத்து மாவை வேக வைக்க வேண்டும்.
அதன் பின் இரண்டு விசில் வந்த உடன் குக்கரை அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். 5நிமிடம் கழித்து குக்கரின் உள்ளே உள்ள பாத்திரத்தை வெளியே எடுத்து ஆற விட வேண்டும். பின்பு ஆறிய மாவை கட்டி இல்லாமல் மசித்து சிறிது தண்ணீர் சேர்த்து கூழ் போல் கரைத்து கொள்ள வேண்டும்.
பின்பு வாணலியை அடுப்பில் வைத்து 200மில்லி தண்ணீர் ஊற்றி அதில் கேசரி கலர்,2கப் சீனியை சேர்த்து சூடு படுத்த வேண்டும். பக்கத்து அடுப்பில் ம்ற்றொரு வாணலியில் 200மில்லி வெஜிடபிள் ஆயில் ஊற்றி நன்கு சூடான உடன் அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும். சீனி, கேசரிகலர் சேர்த்த தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த உடன் அதில் 100மில்லி நெய்யை ஊற்றி நெய் கரைந்த உடன் வெந்த மாவை சேர்த்து அடி பிடிக்காமல் கிண்ட வேண்டும்.
பிறகு ஊற்றிய நெய்யை மாவு உறிஞ்சிய பின் பக்கத்து அடுப்பில் உள்ள நன்கு சூடான வெஜிடபிள் ஆயிலை ஒரு கரண்டி கொண்டு எடுத்து கிண்டும் மாவில் ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து கை விடாமல் கிண்ட வேண்டும்.
அடுத்து இப்பொழுது கொதிக்கும் ஆயில் முழுவதும் இதே போல் ஊற்றி கிண்டி கொண்டே இருக்கும் பொழுது மாவும் ஆயிலை உறிஞ்சிக் கொண்டே இருக்கும்.
பின் சிறிது நேரத்தில் வெந்த மாவு ஆயிலை வெளியே விட ஆரம்பிக்கும் பக்குவத்தில் 50கிராம் முந்திரியை நெய்யில் வறுத்து சேர்க்க வேண்டும். கிண்டிய அல்வாவை ஒரு தட்டில் கொட்டி பரத்தி முந்திரியால் அலங்கரிக்கலாம்.