Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான குடைமிளகாய் பொரியல்… செய்து பாருங்கள் …!!!

குடைமிளகாய் பொரியல் செய்ய தேவையான பொருள்கள் :

குடைமிளகாய்           – 4
வெங்காயம்                 –  2
பொட்டு கடலை         –  4 ஸ்பூன்
மிளகாய்த் தூள்          –  2 ஸ்பூன்
உப்பு                                 – தேவையான அளவு
மஞ்சள் தூள்                –  2 ஸ்பூன்
எண்ணெய்
கடுகு
கறிவேப்பிலை
உளுத்தம் பருப்பு

செய்முறை :

முதலில் குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை சிறிதாக நறுக்கவும்.பொட்டுக்கடலையை பொடித்து வைக்கவும். கடாயில் தாளிக்க கொடுத்தவற்றைப் போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

அதன் பின் தூள் வகைகளை சேர்த்து கிளறவும்.பின் குடமிளகாயுடன் உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். பின் பொடித்து வைத்த பொட்டு கடலைப் பொடியை சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.சுவையான குடை மிளகாய் பொரியல் தயார்

Categories

Tech |