Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான கொண்டைக்கடலை மசாலா… செய்து பாருங்கள் …!!!

கொண்டைக்கடலை மசாலா செய்ய தேவையான பொருள்கள் :

கொண்டைக்கடலை         –  150 கிராம்,
நறுக்கிய வெங்காயம்       – 1 கப்
தக்காளி                                    – 1
சாட் மசாலாத்தூள்             –   அரை டீஸ்பூன்,
கடுகு                                         –  1 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள்                    –  1 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள்                          – 1 சிட்டிகை,
தேங்காய்ப் பால்                 –  அரை  கப்,
எண்ணெய்                             – தேவையான அளவு
உப்பு                                          – தேவையான அளவு

செய்முறை : 

முதலில் கொண்டைக்கடலையை ஊற வைத்துக் கழுவி, வேக வைத்து தனியே எடுத்து கொள்ளவும்.

அதன் பின் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெங்காயம் தாளித்து, தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

பிறகு பச்சை வாசனை போனதும், சாட் மசாலாத்தூளை சேர்த்து நன்கு கலந்து, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும்.

இதனை அடுத்து ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப் பால் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, கொதிக்க விடவும்.

அடுத்தது நல்ல வாசனை வந்ததும், வேக வைத்த கொண்டைக்கடலையைச் சேர்த்து, லேசாகக் கொதிக்க வைத்து இறக்கவும்.

Categories

Tech |