கோதுமை சுண்டல் செய்ய தேவையான பொருள்கள் :
முளைகட்டிய கோதுமை – ஒரு கப்,
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் – கால் டீஸ்பூன்,
தக்காளி – ஒன்று
வெங்காயம் -ஒன்று
கீறிய பச்சை மிளகாய் -2,
கறிவேப்பில்லை -சிறிதளவு,
எண்ணெய், உப்பு -தேவையான அளவு.
செய்முறை :
முதலில் முளைகட்டிய கோதுமையை வேக வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் தாளிக்கவும்.
அதன் பின் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், கறிவேப்பில்லை சேர்த்துக் கிளறவும். பின்னர் வெந்த கோதுமை, உப்பு சேர்த்து, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும். ஆரோகியமான கோதுமை சுண்டல் தயார்