கோதுமை பரோட்டா செய்ய தேவையான பொருள்கள் :
கோதுமை மாவு – 2 கப்
உப்பு – ஒரு தேக்கரண்டி
டால்டா அல்லது நெய் – ஒரு மேசைக்கரண்டி
தண்ணீர் – தேவைக்கு
சர்க்கரை – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
தண்ணீர் – தேவைக்கு
முதலில் இரண்டு கப் அளவிலான மாவு பிசைய தேவையான அளவு தண்ணீரை விட சற்று குறைவான அளவு எடுத்து சூடுப்படுத்தி அதில் உப்பு, நெய் கலந்து மாவை சேர்த்து கிளறி உடனே மூடி வைக்கவும். நன்கு ஆறியதும், தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்து பூரி மாவை விட சற்று பெரிய உருண்டைகளாக போட்டு ஒரு சட்டியில் வைத்து மாவு ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க மேலே மாவு தூவி குலுக்கி வைக்கவும்.
அதன் பின் சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்க்கும் போது சிறிது மாவு சேர்த்து உருட்டி நல்ல மெல்லிய சப்பாத்திகளாக சமமாக தீட்டவும். தவாவை சூடுப்படுத்தி தீயை மிதமாக வைத்து தேய்த்து வைத்திருக்கும் சப்பாத்தியை போடவும். ஒரு துணியால் அல்லது டிஸுவால் அங்காங்கே சிறிதளவு எண்ணெய் தொட்டு அழுத்தி விடவும். திருப்பி போட்டு வெந்ததும் எடுத்து விடவும்.
அடுத்து இதே போல் அனைத்து சப்பாத்தியையும் போட்டு எடுக்கவும். சுவையான ஷாஃப்ட் சப்பாத்தி ரெடி. இந்த சாஃப்ட் சப்பாத்தி திருமதி. சாதிகா அவர்களின் குறிப்பினை பார்த்து சில மாற்றங்களுடன் செய்தது. கோதுமை மாவில் உப்பு, சர்க்கரை, தண்ணீர் சேர்த்து ஒரு பெரிய ஃபோர்கால் நல்ல கிளறி ஐந்து நிமிடம் வைத்து விடவும். இப்போது மாவு நன்கு சேர்ந்து இருக்கும், அதில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி நன்கு பிசையவும்.
பின்பு தண்ணீர் தேவைப்பட்டால் சிறிதளவு தெளித்து நன்றாக அடித்து பிசைந்து கடைசியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பிசைந்து சிறு உருண்டைகளாக போட்டு வைக்கவும். ஒரு உருண்டையை எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து வட்டமாக தேய்க்கவும்.தேய்த்த சப்பாத்தியை புடவை கொசுவம் போல் ஒன்றோடு ஒன்று வைத்து மடித்துக் கொண்டே வரவும். மடித்த சப்பாத்தியை அப்படியே சுருட்டவும்
அடுத்தது இதே போல் எல்லா உருண்டைகளையும் செய்து வைத்துக் கொள்ளவும். தவாவில் போடும் முன் செய்து வைத்திருக்கும் உருண்டைகளை சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்த்துக் கொள்ளவும். தேய்த்து வைத்திருக்கும் சப்பாத்தியை தவாவில் போட்டு தீயை மிதமாக வைத்து வேக விடவும். ஒரு புறம் வெந்ததும் திருப்பி போட்டு சுற்றிலும் எண்ணெய் ஊற்றவும்.நன்கு இரண்டு கரண்டிக் கொண்டு அடுப்பிலேயே வைத்திருந்து நன்கு வேக விட்டு (பொசுக்கி) எடுக்கவும். அப்பொழுது தான் லேயர் பிரியும்.சுவையான கோதுமை பரோட்டா ரெடி.