கோழி கிரேவி செய்ய தேவையான பொருள்கள் :
கோழி – 1/2 கிலோ
உப்பு – தேவைகேற்ப
பச்சை மிளகாய் -5
பிரிஞ்சி இலை – 2
பட்டை – 2 துண்டு
ஏலக்காய் – 3
கிராம்பு – 3
கறிவேப்பிலை – 3 கொத்து
மல்லித்தழை – 1 கப்
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
மிளகு -1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
தனியா தூள் – 1 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு -2 டேபிள் ஸ்பூன்
தயிர் – 3 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு -16
வெங்காயம் – 4 (நறுக்கியது)
சோம்பு – 2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1 டீஸ்பூன்
முதலில் ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த கோழியுடன் இஞ்சி பூண்டு விழுது,மிளகாய் தூள்,தனியா தூள்,மஞ்சள் தூள்,கரம் மசாலாதூள்,தயிர்,உப்பு சேர்த்து பிசிறி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
அதன் பின் மிக்ஸ்சியில் முந்திரி பருப்பை அரைக்கவும்.பிறகு பச்சை மிளகாயுடன் மல்லித்தழை,சோம்பு,மிளகு சேர்த்து அரைக்கவும்.கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை ஏலக்காய் கிராம்பு ப்ரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும்.
அடுத்து வெங்காயம்,கறிவேப்பிலை சேர்த்து சிவப்பாகும் வரை வதக்கவும்.மேலும் அதனுடன் ஊற வைத்த கோழி துண்டுகளை போட்டு கிளறவும்.
பிறகு கோழி முக்கால் பாகம் வேகும் வரை அடிப்பிடிக்காமல் கிளறவும்.தேவைகேற்ப அரை கப் தண்ணீர் சேர்க்கவும்.அரைத்த பச்சை மிளகாய் கலவை சேர்த்து கிளறவும்.
பின்னர் கோழி பதமாக வெந்ததும் அரைத்த முந்திரி பருப்பை ஊற்றி இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.பரிமாறவும்