கோஸ் கடலைப் பருப்புப் பொரியல் செய்ய தேவையான பொருள்கள் :
முட்டை கோஸ் – கால் கிலோ,
கடலைப் பருப்பு -கால் கப்,
பெரிய வெங்காயம் – 2,
தக்காளி -3,
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்,
மிளகாய்த் தூள் -2 டீஸ்பூன்,
உப்பு -தேவைக்கு,
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்,
கறிவேப்பிலை -சிறிது,
கடுகு – 1 டீஸ்பூன்,
சோம்பு -அரை டீஸ்பூன்.
முதலில் கோஸ், வெங்காயம், தக்காளி இவற்றைப் பொடியாக நறுக்குங்கள். கடலைப் பருப்பை பதமாக வேகவைத்து நீரை வடித்துவிட்டு வையுங்கள்.எண்ணெயைச் சூடாக்கி கடுகு, சோம்பு தாளித்து அதில் வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள்.
அதன் பின் பிறகு தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த் தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி, அதனுடன் கோஸ், உப்பைச் சேர்த்து, மிதமான தீயில், கோஸ் வேகும் வரைக் கிளறி, கடைசியில் கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துச் சுருளக் கிளறி இறக்குங்கள்.