க்ரில்டு மீன் செய்ய தேவையான பொருட்கள்:
மீன் – 500 கிராம்
மிளகு – 2 தேக்கரண்டி
மல்லித் தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள் – அரை தேக்கரண்டி
எலுமிச்சை – ஒன்று
செய்முறை :
முதலில் மீனை சுத்தம் செய்து மேலே கத்தியால் கீறி வைக்கவும். மிளகை பொடி செய்து எடுத்துக் கொண்டு, மற்ற தூள் வகைகள் மற்றும் உப்பு சேர்த்து எலுமிச்சை சாறு கலந்து வைக்கவும். அதை மீனின் மேல் தடவி 4 மணி நேரம் மூடி பாத்திரத்தில் ஃபிரிஜ்ஜில் வைக்கவும்
ப்ரிஜ்ஜிலிருந்து எடுத்து சிறிது நேரம் கழித்து மைக்ரோவேவில் க்ரில்லில் வைத்து 10 நிமிடம் இடையில் ஒரு முறை திருப்பி விட்டு க்ரில் செய்து எடுக்கவும். சுவையான மைக்ரோவேவ் க்ரில்டு மீன் தயார்.