Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான சர்க்கரைப் பொங்கல்… செய்து பாருங்க …!!!

சர்க்கரைப் பொங்கல் செய்ய தேவையான பொருள்கள் :

பச்சரிசி                    _ ஒரு கப்
தேங்காய் பால்    _ 3/4 கப்
பனைவெல்லம்  _ 3/4 கப்
உப்பு                          _ துளிக்கும் குறைவாக‌

செய்முறை : 

முதலில் அரிசியைக் கழுவிவிட்டு இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு ஐந்து அல்லது ஆறு மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு ஊறிய அரிசியை தண்ணீருடனே குக்கரிலோ அல்லது ஒரு பாத்திரத்திலோ வைத்து குழையாமல் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்

பனைவெல்லத்தைப் பொடித்து தேங்காய்ப் பாலுடன் சேர்த்து ஒரு கிண்ணத்தில் போட்டு அடுப்பில் ஏற்றி வெல்லம் கரைந்து வந்ததும் மண் & தூசு இல்லாமல் வடிகட்டி அதை ஒரு வாணலில் ஊற்றி மீண்டும் அடுப்பிலேற்றி கொதிக்க ஆரம்பித்ததும், வேக வைத்துள்ள சாதத்தை இதில் கொட்டி விடாமல் கிண்டவும்.எல்லாம் சேர்ந்து இறுகி வந்ததும் இறக்கி பரிமாறவும்.

Categories

Tech |