சிம்ளி செய்ய தேவையான பொருள்கள் :
கேழ்வரகு மாவு – ஒரு கப்
வேர்க்கடலை – அரை கப்
வெல்லம் – 100 கிராம்
நெய்
உப்பு
செய்முறை :
முதலில் கேழ்வரகு மாவுடன் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, அடை மாவு பதத்திற்குப் பிசைந்து வைக்கவும். மாவை அடைகளாகத் தட்டி, வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும்.
அதன் பின் அடைகளை சிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு பொடித்து எடுத்துக் கொள்ளவும். வறுத்த வேர்க்கடலையைக் கொரகொரரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
அடுத்து வெல்லத்தைக் கட்டியில்லாமல் கத்தியால் சீவி எடுத்துக் கொள்ளவும். பிறகு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
பின்பு அத்துடன் நெய் சேர்த்து நன்கு கலந்து உருண்டையாகப் பிடித்துப் பரிமாறவும். சுவையான சிம்ளி தயார்.