Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான சீனிஅவரைக்காய் பொரியல்….செய்து பாருங்கள் …!!!

சீனிஅவரைக்காய் பொரியல் செய்ய தேவையான பொருள்கள் :

சீனி அவரைக்காய்      – 1/2 கிலோ
புளி                                     – சிறிது
வெங்காயம்                   –   1 கப்
மிளகாய்த் தூள்           –    1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்                 –  1/2 தேக்கரண்டி
எண்ணெய்                     –  3 மேசைக்கரண்டி
கடுகு                                 –  1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு         –  1/2 தேக்கரண்டி
உப்பு                                  – தேவைக்கேற்ப

 செய்முறை :

முதலில் குக்கரில் சீனி அவரைக்காயை போட்டு லேசாக வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேக வைத்து இறக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்

அதன் பின் வெங்காயம் வதங்கியதும் வெந்த சீனி அவரைக்காய், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து பிரட்டவும். இவற்றுடன் புளிக் கரைசலை ஊற்றி காய் நன்றாக வதங்கியதும் இறக்கவும்.

Categories

Tech |