சுவையான உக்கரை செய்வது எப்படி என்று இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:
தேவியான பொருள்கள் :
பாசிப் பருப்பு – 1/4 கப்
ரவை – 1/8 கப்
அரிசி மாவு – 1/8 கப்
துருவிய தேங்காய் – 1/8 கப்
ஏலக்காய் பொடி – 1/8 டீஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
முந்திரி – 1 1/2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
நெய் – 4 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 2 கப் + 1/2 கப்
வெல்லம் – 1/2 கப்
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, வெல்லத்தை உருகவிட்டு, தனியாக எடுத்து கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின் அதில் பாசிப்பருப்பைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, 2 கப் நீரை ஊற்றி, பாசிப்பருப்பை நன்கு மென்மையாக வேக வைக்க வேண்டும்.
பாசிப்பருப்பு நன்கு வெந்ததும், அதை இறக்கி, அதில் உள்ள அதிகப்படியான நீரை வடிகட்டி வெளியேற்றிவிட்டு, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், ரவையைப் போட்டு ஒரு நிமிடம் வறுத்து, பின் அரிசி மாவை போட்டு ஒரு நிமிடம் கிளறி விட வேண்டும்.
பின் துருவிய தேங்காயைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கி, வேக வைத்துள்ள பாசிப் பருப்பைப் போட்டு, 1/2 கப் நீரை ஊற்றி நன்கு வேக வைக்க வேண்டும்.
இறுதியில் தயாரித்து வைத்துள்ள வெல்லப் பாகுவை வடிகட்டி ஊற்றி, நன்கு கிளறி விட வேண்டும். அப்படி கிளறும் போது, பாத்திரத்தில் ஒட்டாமல் இருந்தால், அதில் ஏலக்காய் பொடி, உப்பு மற்றும் வறுத்த முந்திரி சேர்த்து கிளறினால், சுவையான செட்டிநாடு உக்கரை தயார்.