சேமியா உப்புமா செய்ய தேவையான பொருள்கள் :
செய்முறை :
முதலில் கடாயில் நெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி, பொட்டுக்கடலை சேர்த்து வதக்கவும் .
பின் குடமிளகாய், கேரட் துருவல் கலந்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் . பின்னர் உப்பு சேர்த்து, ஒரு பங்கு சேமியாவுக்கு இரு பங்கு தண்ணீர் விடவும்.
அதன் பிறகு கொதித்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, சேமியாவைப் போட்டுக் கிளறவும். வெந்ததும், எலுமிச்சைச் சாறு சேர்த்து,பின் நறுக்கிய கொத்தமல்லி தூவிக் கிளறி இறக்கவும்.