சோள மசாலா பணியாரம் செய்ய தேவையான பொருள்கள் :
சோள இட்லி மாவு – ஒரு கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 தேக்கரண்டி
தக்காளி – 1
வரமிளகாய் – 2
சீரகம் – அரை தேக்கரண்டி
வெங்காயம் – பாதி
செய்முறை :
முதலில் அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து, சோள இட்லி மாவுடன் கலந்து கொள்ளவும்.
அதன் பின் அடுப்பில் குழிப்பணியாரச் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் மாவை பணியாரங்களாக ஊற்றவும்.
அடுத்து ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறத்தையும் வேகவிட்டு எடுக்கவும். சுவையான மசாலா சேர்த்த சோள பணியாரம் தயார்.