Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான ஜிலேபி … செய்து பாருங்கள் …!!!

ஜிலேபி செய்ய தேவையான பொருள்கள் :

மைதா                           – 200 கிராம்
சர்க்கரை                       –  2 கப்
தயிர்                                –  2 கப்
எலுமிச்சை சாறு       –  2 தேக்கரண்டி
சோள மாவு                  –  50 கிராம்
நீர்                                      –  1  கப்
எண்ணெய்                    – பொரிக்க
சூடான எண்ணெய்    – 2 மேஜைக்கரண்டி
ஃபுட் கலர்                       –  2 தேக்கரண்டி

 செய்முறை :

முதலில் இவ்வனைத்தையும் மென்மையான கலவையாக நன்கு கலக்கவும். பின்பு எண்ணெயை சூடாக்கவும்.

அதன் பின் சூடான எண்ணெயை மாவுக்கலவையுடன் சேர்த்து நன்கு கலக்கி இரவு முழுவதும் வைக்கவும். ஒரு சாஸ் பானில் சர்க்கரையை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் நீர் சேர்க்கவும். பின்பு அதனை கொதிக்க வைக்கவும். 5-7 நிமிடம் சர்க்கரை கரையும் வரை வைக்கவும்.

அடுத்து  மாவை பபை்பிங் பேக்கில் வைக்கவும். பின்பு பேக்கை அழுத்தி சூடான எண்ணெயில் ஜிலேபியாக போடவும். அது அடர் நிறமாகும் வரை பொரிக்கவும். பின்பு அதனை எடுத்து சர்கக்ரை கலவையில் 30 நிமிடம் ஊற வைக்கவும். ஜிலேபி தயார்.

Categories

Tech |