Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான தக்காளி ஊறுகாய்… செய்து பாருங்கள் …!!!

தக்காளி ஊறுகாய் செய்ய தேவையான பொருள்கள் :

தக்காளி                – 15

மிளகாய் தூள்   –  3 தேக்கரண்டி
உப்பு                        – தேவைக்கேற்ப
கடுகு                       – 2 தேக்கரண்டி
புளி                           –  நெல்லிக்காய் அளவு
வெந்தயம்             – 1 தேக்கரண்டி
எண்ணெய்            – தேவையான அளவு
கடுகு                        – 1/4 தேக்கரண்டி
பெருங்காயம்      – சிறிது
எண்ணெய்            –   3 தேக்கரண்டி

 செய்முறை :

முதலில் தக்காளியை முதல் நாள் இரவு நன்றாக அலசி, இரண்டாக நறுக்கி ஒரு ப்ளாஸ்டிக் கன்டைனரில் போட்டு 2 தேக்கரண்டி உப்பு சேர்த்து, கைபடாமல் குலுக்கி வைக்கவும். இரவெல்லாம் ஊறி தக்காளியில் நீர் விட்டிருக்கும்.

அதன் பின் வேண்டுமானால் இந்த உப்பு நீரிலேயே ஊறுகாய்க்கு பயன்படுத்தப் போகும் புளியை போட்டு வைத்து விடலாம். அடுத்த நாள், தக்காளி துண்டுகளை ஒரு கரண்டியால் எடுத்து ஒரு தட்டில் வைத்து வெயிலில் காய வைக்கவும். அந்த உப்பு நீரையும் வெயிலில் வைக்கவும். மாலையில் தக்காளி துண்டுகளை அதே உப்பு நீரில் சேர்த்து மூடி வைத்து விடவும்.

பிறகு  அடுத்த நாள் காலையில் தக்காளி துண்டுகள் தனியே, உப்பு நீர் தனியே பிரித்து வெயிலில் வைத்து காய வைக்கவும். இரண்டு மூன்று நாட்கள் வெயிலில் வைத்தால் போதும். தக்காளி துண்டுகள் நன்றாக சுருங்கிவிடும். உப்பு நீரும் வற்றி இருக்கும். பின்னர் மிக்சியில் தக்காளி துண்டுகள், புளி மற்றும் வற்றியுள்ள உப்பு நீர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.

பின்பு வெறும் கடாயில் கடுகு, வெந்தயம் வறுத்து, பொடித்துக் கொள்ளவும். அதே கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு பொரிந்ததும், பெருங்காயம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். இதில் அரைத்த தக்காளி-புளி விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.

அடுத்து வெயிலில் காய வைத்திருப்பதால் தக்காளி விரைவிலேயே வதங்கி விடும். இதனுடன் ஆந்திரா மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். சிறிதளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். உப்பு சரிப்பார்த்து தேவையெனில் சிறிது சேர்க்கவும். இப்போது பொடித்து வைத்துள்ள கடுகு-வெந்தயம் சேர்த்து அடுப்பை நிறுத்தி விடவும். சுவையான கொங்கு தக்காளி ஊறுகாய் தயார்.

Categories

Tech |