Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான தக்காளி ஜாம் … செய்து பாருங்க …!!!

தக்காளி ஜாம் செய்ய தேவையான பொருள்கள் :

பச்சைமிளகாய்        – 1
பழுத்த தக்காளி      – 1 கிலோ
சிவப்பு ஃபுட் கலர்    – ஒருசிட்டிகை
சர்க்கரை                     – அரை கிலோ
முந்திரி, திராட்சை – 10 கிராம்
பன்னீர்                          – ஒரு டீஸ்பூன்
நெய்                               – 2 டீஸ்பூன்
செய்முறை : 

முதலில் தக்காளி, பச்சை மிளகாயை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு 5 நிமிடம் கொதிக்க விட்டு, அடுப்பை அணைக்கவேண்டும் .

அதன் பின்  ஆறியதும் தக்காளியின் தோல் நீக்கி மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும். தேங்காய் பால் எடுக்கும் வடிகட்டியில் தக்காளிக் கலவையை வடிக்கவும்.

பின்பு தக்காளிச் சக்கையை மிக்ஸியில் மீண்டும் அரைத்து வடிக்கவும். இதனை அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும்.பின் கலவை நன்கு சுண்டி வரும் போது, சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவேண்டும் .

அடுத்தது  ஜாம் சுண்டியதும் இறுதியாக நெய், பொடியாக நறுக்கிய முந்திரிப்பருப்பு மற்றும் திராட்சை சேர்க்கவும் ஃபுட் கலர் பன்னீர் சேர்க்கவும். ஜாம் திரண்டு வந்ததும் இறக்கவும்.

Categories

Tech |